"தேர்தலில் ஜெயித்தால் ஈரானுக்கு எதிரான போர் தொடரும்" - பிரச்சாரத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு!
இஸ்ரேலில் பொதுத்தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், தான் மீண்டும் பிரதமராகத் தேர்வானால் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி ஈரானிய ஆட்சியை வீழ்த்துவதே முதன்மை இலக்கு எனப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தமக்கு அளித்து வரும் ஆதரவைக் சுட்டிக்காட்டிய நெதன்யாகு, டிரம்புடன் இணைந்து ஈரானின் அச்சுறுத்தல்களுக்கு எதிராகத் திட்டமிட்ட ராணுவத் தாக்குதல்களை முன்னெடுப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் களத்தில் பேசிய அவர், "எங்கள் எதிரிகளான ஈரானும் அதன் கூட்டாளிகளும் தேர்தல் நேரத்தைப் பயன்படுத்தி அச்சுறுத்தல் விடுக்க முற்பட்டால், அவர்கள் கடுமையான மற்றும் நினைத்துப் பார்க்க முடியாத பதிலடிகளைச் சந்திக்க நேரிடும்" என எச்சரித்துள்ளார்.
இதனிடையே, தேர்தலுக்கு முன்பாகவே ஈரான் மீது புதிய தாக்குதல்களை நடத்த நெதன்யாகு முயன்றதாகவும், ஆனால் இஸ்ரேலிய ராணுவத் தலைமை அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றும் வெளியுறவுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

நெதன்யாகுவின் இந்த பிரச்சார அறிவிப்பு மற்றும் போரைத் தொடர்வது தொடர்பான பேச்சுகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவி வரும் போர் பதற்றத்தை மேலும் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளன.
