இஸ்ரேல் - லெபனான் போர் பதற்றம்.. இந்தியர்கள் வெளியேற திடீர் உத்தரவு!
இஸ்ரேலுக்கும் அதன் அண்டை நாடுகளான லெபனானுக்கும் மோதல் ஏற்பட்டது. குறிப்பாக லெபனானில் ஆதிக்கம் செலுத்தும் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக கடுமையான மோதல்கள் நிலவி வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் 35 குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 51 பேர் கொல்லப்பட்டனர்; 1,615 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், இஸ்ரேலின் தாக்குதலில் இன்று 51 பேர் உயிரிழந்தனர்.
Advisory dated 25.09.2024 pic.twitter.com/GFUVYaqgzG
— India in Lebanon (@IndiaInLebanon) September 25, 2024
233 பேர் படுகாயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் லெபனானில் உள்ள இந்திய தூதரகம் அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதன்படி, மறு அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் யாரும் லெபனானுக்கு செல்ல வேண்டாம். லெபனானில் உள்ள இந்தியர்களும் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தவிர்க்க முடியாத காரணங்களால் லெபனானில் தங்கியிருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகத்தை cams.beirul@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 196176860128 என்ற அவசர தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!