ஹிஸ்புல்லாவுடனான மோதல் இன்னும் முடியவில்லை!” - 90% ஏவுகணைகள் அழிப்பு - ட்ரம்பின் தடையையும் மீறி இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை!

 
நெதன்யாகு நெதன்யாகு

 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வேண்டுகோளை ஏற்று லெபனானில் 10 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டாலும், ஹிஸ்புல்லா அமைப்பை முழுமையாக ஒழிக்கும் வரை தங்களது நடவடிக்கை தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஈரான் இஸ்ரேல்

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பெஞ்சமின் நெதன்யாகு, ஹிஸ்புல்லா அமைப்பால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளில் சுமார் 90 சதவீதத்தை இஸ்ரேல் ராணுவம் ஏற்கனவே தாக்கி அழித்துவிட்டது. ஏவுகணைகள் அழிக்கப்பட்டாலும், ஹிஸ்புல்லா என்ற ஆயுதக் குழுவை முழுமையாகக் கலைக்கும் பணி இன்னும் நிறைவடையவில்லை. தற்காலிகப் போர் நிறுத்தம் என்பது ஒரு சிறிய இடைவெளி மட்டுமே என அவர் குறிப்பிட்டார். தனது நண்பர் ட்ரம்பின் கோரிக்கைக்கு மதிப்பளித்தே இந்தத் தற்காலிக அமைதிக்குச் சம்மதித்ததாக அவர் விளக்கமளித்தார்.

சுவாரஸ்யமாக, "லெபனான் மீது இனிமேல் குண்டு வீசுவதற்கு இஸ்ரேலுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இதுவே போதும்" என அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே நெதன்யாகு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் உத்திகளில் நிலவும் முரண்பாடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

இஸ்ரேல் நெதன்யாகு

இந்த 10 நாள் போர் நிறுத்தம் இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லையில் உள்ள மக்களுக்குச் சற்றே நிம்மதியை அளித்துள்ள போதிலும், நெதன்யாகுவின் இந்த ‘முற்றுப்புள்ளி வைக்காத’ உரை மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.