இன்று நள்ளிரவு விண்ணில் பாயும் NVS-03 செயற்கைக்கோள்... !

 
ஸ்ரீஹரிகோட்டா

 

இந்தியாவின் சொந்த செயற்கைக்கோள் வழிகாட்டி அமைப்பான ‘நாவிக்’ (NavIC) சேவையை மேம்படுத்தும் நோக்கில், NVS-03 செயற்கைக்கோளை இன்று (அக். 30) இரவு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இஸ்ரோ

இதற்காக GSLV-F18 ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இரவு 11.51 மணிக்கு ராக்கெட் புறப்பட உள்ளது. இதற்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் ஏற்கனவே தொடங்கியுள்ளது.

இஸ்ரோ

சுமார் 2,232 கிலோ எடை கொண்ட NVS-03 செயற்கைக்கோள், இந்தியாவின் இரண்டாம் தலைமுறை நாவிக் திட்டத்தின் மூன்றாவது செயற்கைக்கோளாகும். இதில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணுக் கடிகாரம் இடம்பெற்றுள்ளது. மேலும், ஏற்கனவே பயன்படுத்தப்படும் L5, S அலைவரிசைகளுடன் L1 அலைவரிசையும் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் வழிகாட்டி சேவைகளின் பயன்பாடு விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.