அமலுக்கு வந்தது.. இன்று காலை முதல் பால் விலை உயர்வு - இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
இன்று செப்டம்பர் 1-ம் தேதி காலையிலேயே அமலுக்கு வந்தது. இன்று முதல் மும்பையில் பால் விலை உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இது உடனடி அமல்படுத்தப்பட்டுள்ளது.
மும்பை பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மொத்த விலையை லிட்டருக்கு ரூ.93-ல் இருந்து ரூ.102 ஆக உயர்த்தியுள்ளது. இதனால் சில்லறை நுகர்வோருக்கு ஒரு லிட்டர் பால் சுமார் ரூ.110 வரை விற்கப்படலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விலை உயர்வு பிப்ரவரி 28, 2027 வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் விலை உயர்வு காரணமாக நுகர்வோர்களின் மாதாந்திர பட்ஜெட் கடுமையாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதேபோல், வரவிருக்கும் நாட்களில் தமிழ்நாட்டிலும் பால் விலை உயர வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. ஏற்கெனவே அரிசி கிலோ ரூ.100யைத் தொட்ட நிலையில், சர்க்கரை, காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பால் விலையும் உயர்த்தப்பட இருப்பதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.
