’திருமணமான பெண் வேறு ஆணுடன் உடலுறவில் இருப்பது குற்றமில்லை’.. நீதிமன்றம் பகீர் உத்தரவு!

 
ராஜஸ்தான் நீதிமன்றம்

ராஜஸ்தான் மாநிலத்தில் ரன்வீர் என்பவர் தனது மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். அப்போது அவரது மனைவியை திடீரென 3 பேர் கடத்திச் சென்றுள்ளனர். இதனால் பதற்றமடைந்த ரன்வீர், தனது மனைவி கடத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கு ராஜஸ்தான் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர், விசாரணையின் போது, ரன்வீரின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜராகி, கடத்தல் கூற்றை மறுத்து, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருடன் (Sex Outside Marriage) உறவில் இருப்பதாகக் கூறினார்.

இதனால் கடத்தல் வழக்கை நீதிமன்றம் ரத்து செய்தது. ஆனால், அந்த பெண்ணின் கணவர் ரன்வீர் மேல்முறையீடு செய்தார். திருமணமான பெண் வேறொரு ஆணுடன் உறவில் ஈடுபடுவது சமூக சீரழிவு. இந்த வழக்கில் நீதிமன்றம் தலையிட்டு சமூக ஒழுக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்றும் திருமணத்திற்கு புறம்பான உறவுகளை மன்னிக்கக் கூடாது என்றும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருமணத்திற்கு பிறகு வேறு ஒருவருடன் உடலுறவு கொள்வது குற்றமாகாது. மேலும் புகார்தாரரின் மனைவி யாரையும் திருமணம் செய்து கொள்ளாததால், பிரிவு 494-ன் கீழ் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web