வீடியோ!! கல்லூரியில் புகை மற்றும் மது குடிப்பது எங்கள் உரிமை!! மாணவி பரபரப்பு!!

 
மது

இன்றைய இளசுகள் வீட்டில் பெற்றோர்கள், பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள், உறவினர்கள் நண்பர்கள் யார் பேச்சையும் கேட்பதே கிடையாது. அவர்களுடைய வேலை ஆகும்வரை எல்லாம். அதன் பிறகு  எல்லோரும் ஒன்று தான். நான், எனது , என்னுடைய சந்தோஷத்தையும், வசதிகளையும் யாருக்காகவும் விட்டுத்தரமாட்டேன் என்கிற அலட்சிய மனோபாவம். அந்த வகையில் கல்லூரி மாணவி ஒருத்தி  பல்கலைக் கழக வளாகத்திற்குள் மது குடிப்பது எங்கள் உரிமை  இதனை யாரும் தங்களுக்கு வழங்க வேண்டிய அவசியம் இல்லை எனவும்  எனவும் தெரிவித்துள்ளார். மாணவியின் இந்த கருத்துக்கு  சமூக வலைதளங்களில் கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன.


மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஜாதவ்பூர் பல்கலைக் கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் 1000க்கும் மேற்பட்ட  மாணவர்கள் பல்வேறு துறைகளில் படித்து வருகின்றனர்.  இங்கு சில நாட்களுக்கு முன்பு முதலாம் ஆண்டு  மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும்  ஏற்படுத்தியது. இந்நிலையில் அதே பல்கலைக் கழகத்தை சேர்ந்த மாணவி ஒருவர் அடாவடித்தனமாக பேசி தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளார். இது குறித்த   வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது இந்த  வீடியோவில்  ”பல்கலைக் கழகம் எங்களுக்கு 2 வது வீட்டைப் போன்றது. அதன் அடிப்படையில் இந்த வளாகத்தில் எங்களுக்கு புகை பிடிக்கவும், மது குடிக்கவும் உரிமை உண்டு. இதற்காக நாங்கள் யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை. இது எங்களுடைய உரிமை.” எனக் கூறியுள்ளார்.  

பார் எலைட் சரக்கு டாஸ்மாக் ஸ்டார் ஹோட்டல்


இதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இவ்வளவு பேசும் நீங்கள் எதற்காக படிக்க வேண்டும்? அதை விட்டு விடலாமே எனக்  கூறியுள்ளார். இன்னொருவர் பொது இடங்களில் மது குடிக்கவோ, சிகரெட் பிடிக்கவோ அனுமதி கிடையாது. பல்கலைக் கழகம் பொதுவானது என்பதால் இங்கு நீங்கள், மது அருந்த புகைப்பிடிக்க கூடாது.
பல்கலைக் கழகத்தை  2 வது வீடாக நினைக்கலாம் ஆனால் அது உங்களுக்கு சொந்தமானது கிடையாது.  எனவே பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் எனக்  கூறியுள்ளார்.  இது போன்ற மாணவிகளை உருவாக்கியதில் பல்கலைக் கழக நிர்வாகத்திற்கும் பங்கு உண்டு என சிலர் கூறியுள்ளனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!