“எப்பவுமே நடக்காது...” - மாமியார் விதித்த நிபந்தனைக்கு நடிகர் ரவி மோகன் பதில்!

 
ஜெயம் ரவி

மனைவியைப் பிரிந்து வாழும் பிரபல நடிகர் ரவி மோகன் தனது குழந்தைகளைச் சந்திக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், அவரது மாமியார் சுஜாதா விதித்த நிபந்தனைக்கு ரவி மோகன் வேதனையுடன் பதிலளித்துள்ளார்.

கெனிஷா  ரவி மோகன்!

நீதிமன்றம் குழந்தைகளைச் சந்திக்க அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, "ரவி மோகன் தனது குழந்தைகளைப் பொது இடத்தில்தான் சந்திக்க வேண்டும்" என அவரது மாமியார் சுஜாதா நிபந்தனை விதித்திருந்தார்.

ஜெயம் ரவி

மாமியாரின் இந்த நிபந்தனை குறித்துப் பேசிய ரவி மோகன், "நீதிமன்ற உத்தரவைச் சிலர் அவமதிப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. நான் உயிருடன் இருக்கும் வரை நாங்கள் நால்வரும் ஒரே அறையில் மீண்டும் ஒன்றிணைந்து சேர்வது என்பது இனி நடக்கவே நடக்காது" என மிகுந்த மனவேதனையுடன் தெரிவித்துள்ளார்.