ஜூன் வரை வெயில் கொளுத்தும்... வீட்டை விட்டு வெளியே வராதீங்க!

 
வெயில்

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாகவே  இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.  இதுகுறித்து வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை வெப்பத்தின் தாக்கம் இயல்பைவிட அதிகம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.


பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ள நேரங்களில் குறிப்பாக பிற்பகல் 12 மணி முதல்  3 மணி வரை பயணங்களையும், வெளியே செல்வதையும் தவிர்க்க வேண்டும். போதுமான இடைவெளியில் தேவையான அளவு குடிநீரைப் பருக வேண்டும். இத்துடன் கோடை காலத்தில் எடை குறைவான, தளர்வான நுண்ணிய பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். பாதுகாப்பு கண்ணாடிகள், குடை, தொப்பி, காலணிகளை அணிந்து வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாத்து கொள்ளலாம். பயணங்களின்போது குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும். வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ள நேரங்களில் மது, தேநீர் மற்றும் கார்பன் கலந்த குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும் 

வெயில் மாஸ்க் மாணவிகள் இளம்பெண்கள்
வெயில் நேரங்களில் வெட்ட வெளியில் பணிபுரியும் போது தலை, கழுத்து, முகம் மற்றும் கை, கால் பகுதிகளில் குடை, தொப்பி மற்றும் ஈரமான துணிகளை பயன்படுத்தி வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாத்து கொள்ளலாம். வெயில் நேரங்களில் வாகனங்களை நிறுத்தி வைக்கும்போது குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளை வாகனத்தில் விட்டு செல்லக்கூடாது. மயக்கம் அல்லது மிகுந்த உடற்சோர்வு காணப்பட்டால் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும்.
உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கும் ஓ.ஆர்.எஸ் கரைசல், லஸ்ஸி, எலுமிச்சை பழச்சாறு, மோர் போன்ற உணவு பொருட்களை எடுத்து கொள்ளலாம். கால்நடைகளை நிழற்பாங்கான இடங்களில் வைக்கவும், போதுமான அளவு தண்ணீர் வழங்கவும் வேண்டும்.

வெயில்

தவிர்க்க முடியாத காரணங்களால் வெப்பத்தினால் ஒருவருக்கு வெப்ப பக்கவாதம் ஏற்பட்டால் அவரை உடனடியாக நிழற்பாங்கான இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். உடனடியாக ஈரத்துணியால் அவரது உடலை துடைக்க வேண்டும். தலையில் சாதாரண தண்ணீரை ஊற்றி பாதிக்கப்பட்டவரின் உடல் வெப்பநிலையைக் குறைக்க முயற்சிக்கலாம். பாதிக்கப்பட்டவருக்கு ஓஆர்எஸ் கரைசல் அல்லது எலுமிச்சை சாறு அல்லது நீர்சத்தை அதிகரிக்கக்கூடிய திரவப் பொருட்களை வழங்க வேண்டும். அத்துடன் உடனடியாக அருகில்  உள்ள மருத்துமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க வேண்டியதும் அவசியம்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web