பனி படர்ந்த பள்ளத்தாக்கில் சிக்கிய இந்தியரை காப்பாற்றிய இத்தாலி விமானப்படை வீரர்கள்!
பனி படர்ந்த இத்தாலிய மலைப் பள்ளத்தாக்கில் சிக்கித் தவித்த மலையாள மலையேற்ற வீரர் விமானப்படையால் மீட்கப்பட்டார்.அப்ரூஸ்ஸோ பகுதியில் உள்ள மையெல்லா தேசிய பூங்காவின் மலைத்தொடர்களுக்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பிளாக்பஸ்டர் திரைப்படமான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' திரைப்படத்தில், குகைக்குள் சிக்கியிருந்த இளைஞரை நண்பர்கள் வீரத்துடன் மீட்டெடுத்த காட்சியை நினைவுபடுத்தும் வகையில், இத்தாலியில் மலையேற்றத்தின் போது பள்ளத்தாக்கு ஒன்றில் வழுக்கி விழுந்து பனி மலையில் சிக்கித் தவித்த இந்தியரைக் காப்பாற்ற இத்தாலிய விமானப்படை நடவடிக்கையில் இறங்கியது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள காலடியில் உள்ள கஞ்சூரைச் சேர்ந்த அனூப். இவர் இத்தாலியில் நண்பர்களுடன் கடல் மட்டத்திலிருந்து 2,400 மீட்டர் உயரத்தில் உள்ள மலையில் மலையேற்றத்தில் ஈடுபட்டார்.
ரோம் நகருக்கு அருகில் உள்ள அப்ரூஸ்ஸோ பகுதியில் உள்ள மையெல்லா தேசிய பூங்காவின் மலைத்தொடர்களுக்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போது திடீரென அனூப் மலைச் சரிவில் நழுவி கீழே விழுந்தார். இறுதியில் ஒரு பள்ளத்தாக்கில் சிக்கி, பனிக்கு அடியில் புதைந்து, அவரது வாழ்க்கையின் முடிவு நெருங்கி விட்டதாக உணர்ந்தார்.

உடனடியாக அனூப்பை மீட்கும் ஆரம்ப முயற்சிகள் இரவு தொடங்கியதால் தாமதமான நிலையில், கைவிடப்பட்டாலும் அதிகாரிகள் உதவிக்காக அவசரமாக இத்தாலிய விமானப்படையை அழைத்தனர். அனூப்பை மீட்க இரவில் இத்தாலிய விமானப்படை ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டது. கடும் குளிரில் களைத்துப்போயிருந்த அனூப், திறமையான விமானப்படை வீரர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். மீட்கப்பட்டதும், அனூப் தனது உயிரைக் காப்பாற்ற உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
