மாணவர்களுக்கு நற்செய்தி... ஐடிஐ மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை அவகாசம் நீட்டிப்பு!!

 
ஐடிஐ ஐடிஐ

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கான நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம்  நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதற்கான சேர்க்கை அவகாசமானது கடந்த 13-ம் தேதியுடன் முழுமையாக முடிவடைந்திருந்தது. இந்த நிலையில் தகுதியுள்ள மாணவர்கள் அனைவரும் விடுபடாமல் விண்ணப்பிக்கும் வகையில் இந்த கால அவகாசம் ஜூன்  30-ம் தேதி வரை  நீட்டிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐடிஐ

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை படிப்புகளுக்கான விண்ணப்பத் தேதியிலும் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மிகச் சரியாக நாளை ஜூன் 17-ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. ஆனால் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த அவகாசமும்  ஜூன் 23-ம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு   நீட்டிக்கப்பட்டுள்ளது.

குட் நியூஸ்! ஐடிஐ மாணவர்களே ! உங்க காட்டில் மழை தான்!

விண்ணப்பிக்கத் தவறிய மற்றும் தாமதமாக மதிப்பெண் சான்றிதழ் பெற்ற மாணவர்களுக்கு அரசின் இந்த அடுத்தடுத்த அறிவிப்புகள்  மிகப்பெரிய நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது. இரண்டு முக்கிய உயர் படிப்புகளுக்கான சேர்க்கை அவகாசம்   நீட்டிக்கப்பட்டு இருப்பதால் மாணவர்கள் மிகவும் நிதானமாகத் தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து வருகின்றனர். இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி தகுதியுள்ள மாணவ மாணவிகள் அனைவரும் தங்களின் எதிர்காலப் படிப்பிற்கு விரைந்து விண்ணப்பிக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன.