டேய்... நடுரோட்டில் செய்யுற வேலையாடா இது... காதல் ஜோடி நடுரோட்டில் அட்ராசிட்டி... வைரலாகும் வீடியோ!

 
காதல் ஜோடி

டேய்.... நடுரோட்ல செய்யுற வேலையாடா இது என்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத் பழைய நகரில் நடந்துள்ள இந்த பரபரப்பு சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பஹாடி ஷெரீப் சாலையில் பைக்கில் சென்ற காதல் ஜோடி, பொது சாலையில் பயணித்து செல்பி எடுத்துக்கொண்டனர். பைக்கில் சென்றுக்கொண்டிருக்கும் போதே முத்தமும் கொடுத்துள்ளனர்.  பரபரப்பான சாலையில் நடந்த இந்த சம்பவத்தை சாலையில் சென்ற ஒருவர் செல்போன் கேமராவில் படம் பிடித்துள்ளார்.


இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பலர் இந்த சம்பவத்தை விமர்சித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, சம்பவத்தின் வீடியோ காட்சிகளின் அடிப்படையில் ஜோடியை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இளைஞர் பைக்கில் சென்றபோது  பைக்கில் அமர்ந்திருந்த  காதலி காதலனுக்கு முத்தம் கொடுத்தார். இந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web