370 வருஷங்களாச்சு... திருச்செந்தூரில் சண்முகர் திருவிழா... பூஜை நேரங்கள் மாற்றம்!

 
திருச்செந்தூர் கந்தசஷ்டி
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா பிப்ரவரி 11ம் தேதி நடைபெற உள்ள நிலையில், திருச்செந்தூரில் பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து இணை ஆணையர் சு.ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் உற்சவரான சண்முகர், கடலில் கண்டெடுக்கப்பட்டு 370 ஆண்டுகள் ஆகின்றன. அதைக் கொண்டாடும் வகையில், சண்முகர் ஆண்டு விழா இம்மாதம் 10ம் தேதி நடைபெறுகிறது.

திருச்செந்தூர்

இதையொட்டி, அன்றைய தினம் கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம்,10 மணிக்கு சண்முகர் அபிஷேகம், பிற்பகல் 3 மணிக்கு பிரதோஷ அபிஷேகம், 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 5 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதியுலா வந்து கோயில் சேர்தல், பின்னர் மற்ற கால பூஜைகள் நடைபெறும்.

திருச்செந்தூர்

தைப்பூசத்தை முன்னிட்டு 11ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 6 மணிக்கு தீர்த்தவாரி, 10 மணிக்கு சண்முகர் அபிஷேகம், பிற்பகல் 1 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் தைப்பூச மண்டபத்துக்கு புறப்படுதல், மாலை 5 மணிக்கு சுவாமி தங்க மயில் வாகனத்தில் வீதியுலா வருதல், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web