மொத்தமா மாறப் போகுது... தமிழக காங்கிரஸ் தலைவராகிறார் விஜய் வசந்த்?!

 
விஜய் வசந்த் விஜய் வசந்த்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் செல்வபெருந்தகை விரைவில் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ள நிலையில், அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு கட்சிக்குள் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்தப் புதிய தலைவர் பதவிக்கான போட்டியில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தின் பெயர் டெல்லி மேலிடத்தால் மிக வலுவாகப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறைந்த வசந்தகுமாரின் மகனான விஜய் வசந்த், தனது தந்தையைப் போலவே எளிமையான அணுகுமுறை மற்றும் கடின உழைப்பால் கட்சி மேலிடத்தின் நன்மதிப்பைப் பெற்றுள்ளார். விஜய் வசந்த் ஏற்கனவே கன்னியாகுமரி தொகுதியில் 2 முறை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தனது செல்வாக்கை நாடாளுமன்ற அளவில் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

விஜய் வசந்த்

குறிப்பாக இளைஞர்களைக் கவரும் இவரது தனித்துவமான ஸ்டைலும், தென் மாவட்டங்களில் காங்கிரஸின் வாக்கு வங்கியை மேலும் பலப்படுத்தும் வியூகமும் இவருக்குப் பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் காங்கிரஸை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல ஒரு இளம் மற்றும் துடிப்பான தலைவர் தேவை என்ற எண்ணத்தில் உள்ள ராகுல் காந்தி, விஜய் வசந்திற்கு இந்தப் பொறுப்பை வழங்க அதிக ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசல்கள் மற்றும் மூத்த தலைவர்களின் கருத்துகளையும் டெல்லி தலைமை ஆலோசித்து வருகிறது. தென் மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே வேளையில், மாநிலம் முழுவதும் கட்சியை வலுப்படுத்தும் திறன் கொண்ட ஒருவரைத் தேர்ந்தெடுக்க மேலிடம் திட்டமிட்டுள்ளது.

விஜய் வசந்த்

இன்னும் சில தினங்களில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விஜய் வசந்த் புதிய தலைவராக நியமிக்கப்பட்டால் அது தமிழக காங்கிரஸில் ஒரு புதிய மாற்றத்திற்கு வழிவகுக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.