ஒரே வெயில்.. வேட்புமனு தாக்கல் செய்யும் போது சுருண்டு விழுந்த நா.த.க வேட்பாளர்!

 
சத்யா தேவி

மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யாதேவி வெயிலில் மயங்கி விழுந்தார். அவருக்கு தண்ணீர் கொடுத்து நெற்றியில் திருநீறு பூசி வேட்புமனு தாக்கல் செய்ய கையைப் பிடித்து அழைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மக்களவைத் தொகுதிக்கு போட்டியிடும் மார்க்சிஸ்ட், அதிமுக, பாஜக, சுயேச்சை வேட்பாளர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். அதனால், அரசியல் கட்சியினரின் ஆட்டம், ஆடல், ஊர்வலம் என ஆட்சியர் அலுவலகம் திருவிழா போல் காணப்பட்டது.

நேற்று பரபரப்பு ஓய்ந்த நிலையில், இன்று சுயேச்சை வேட்பாளர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யாதேவி நேற்று வேட்புமனு தாக்கல் செய்வதாக இருந்தது. ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய வரவில்லை. இந்நிலையில் இன்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யாதேவி தனது கட்சியினருடன் வேட்புமனு தாக்கல் செய்ய கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தார்.

பின்னர் தமுக்கத்தில் உள்ள தமிழ்த் தாய் சிலைக்கும், அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கும் மாலை அணிவித்து பிரபாகரன் படம் வைத்து உறுதிமொழி ஏற்றனர். ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். களைத்துப்போய் தரையில் அமர்ந்தார். பதறிப்போன கட்சியினர் அவருக்கு தண்ணீர் கொடுத்து நெற்றியில் திருநீறு பூசினர். அதன்பின், மெதுவாக ஆட்சியர் அலுவலகத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டு, ஆட்சியர் சங்கீதா முன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web