“லிஸ்ட்லேயே இல்லையே..” “கொடியைக் கொடுங்கள் கோட்டையைப் பிடிப்போம்” ரவி மோகன் ரசிகர் மன்ற நிர்வாகி பேசியதால் பரபரப்பு!
தமிழ் படவுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ரவி மோகன், சென்னையில் நேற்று நடைபெற்ற அகில இந்திய ரவி மோகன் தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தின் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் பேசிய ரவி மோகன், கடந்த சில ஆண்டுகளாகத் தன் ரசிகர்களை நேரில் சந்திக்க முடியாமல் போனதை நினைத்து மிகவும் வருத்தமடைந்ததாகக் கூறினார்.
ஆனால் தான் பார்க்க வர முடியவில்லை என்றாலும் ரசிகர்கள் அனைவரும் தன்னைத் தேடி வந்துள்ளதாக அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதைத் தொடர்ந்து பேசிய ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர், அண்ணா அழைப்பு கொடுங்கள் உங்கள் ரசிகர்கள் அலையாக வருவோம் என்றும், கொடியைக் கொடுங்கள் கோட்டையைப் பிடிப்போம் என்றும் ஆவேசமாகப் பேசினார்.
உடனே நடிகர் ரவி மோகன் எழுந்து வந்து அந்த நிர்வாகியிடம் ஏதோ பேசிவிட்டுச் சென்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வரும் நிலையில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், கோலிவுட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பையும் உருவாக்கியுள்ளது.
