நம்ம ஃபோக்கஸ் லேப்டாப் தான்.. 24 லேப்டாப்களை ஆட்டைய போட்ட கில்லாடி ஐ.சி.ஐ.சி.ஐ பெண் ஊழியர்!

 
ஜெஸ்ஸி அகர்வால்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் விலை உயர்ந்த மடிக்கணினிகள் திருடப்பட்டுள்ளன. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கோரமங்களா, எச்ஏஎல், இந்திரா நகர் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். இதையடுத்து, மடிக்கணினி திருடு போனது குறித்து விசாரிக்க, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் பி.தயானந்தா, போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு இளம் பெண் மடிக்கணினிகளை திருடுவது பதிவு செய்யப்பட்டது. அந்த பெண்ணின் அடையாளம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பெங்களூரில் உள்ள ஐசிஐசிஐ வங்கியில் பணிபுரியும் ஜெஸ்ஸி அகர்வால் என்ற இளம் பெண் மடிக்கணினியை திருடியது தெரியவந்தது.

லேப்டாப் டேப்லட்

ஜெஸ்ஸி அகர்வால் காலையில் ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் இருந்து மடிக்கணினிகளை திருடியுள்ளார். அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 24 மடிக்கணினிகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஆணையர் பி.தயானந்தா தெரிவித்தார். மேலும், "ஜெஸ்ஸி அகர்வால் ராஜஸ்தானை சேர்ந்தவர். முன்பு வங்கியில் பகுதிநேர வேலை செய்து வந்தார். லேப்டாப் திருடியதற்காக கைது செய்யப்பட்டார்" என்றும் அவர் கூறினார். பெங்களூருவில் பெண் வங்கி ஊழியர் ஒருவர் விலை உயர்ந்த லேப்டாப்களை திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web