இல்லத்தரசிகளுக்கு ஜாக்பாட்.. மாதந்தோறும் ரூ.2,500.. விஜய் பிறந்தநாளில் "மதிப்புமிகு மகளிர் திட்டம்" தொடங்க பக்கா பிளான்!
தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான இல்லத்தரசிகள் முகத்தில் பேரானந்தப் புன்னகையை வரவழைக்கும் வகையிலான நற்செய்தி கோட்டை வட்டாரத்தில் இருந்து கசிந்துள்ளது.
தமிழகத்தில் தகுதிவாய்ந்த இல்லத்தரசிகளுக்கு தற்போது மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகையை, உயர்த்தி மாதந்தோறும் ரூ.2,500 ஆக வழங்கத் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் திட்டம் தீட்டி வருகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பைத் தமிழக முதல்வர் விஜய், விரைவில் கூடவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் விதி எண் 110-ன்கீழ் வெளியிட உள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த உதவித்தொகை உயர்வானது, வரும் ஜூன் 22-ம் தேதி கொண்டாடப்பட உள்ள முதல்வர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, "பிறந்தநாள் பரிசாக" இருக்கும் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி, இத்திட்டத்திற்குப் புதிய தோற்றத்தைக் கொடுக்கும் வகையில், "மதிப்புமிகு மகளிர் திட்டம்" எனப் புதிய பெயர் சூட்டப்பட்டு அன்றைய தினமே மாநிலம் முழுவதும் முறைப்படி தொடங்கி வைக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக விபரங்கள் வெளியாகியுள்ளன.

புதிய ரூ.2,500 திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் அரசாணை தயாரிக்கும் பணிகள் ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், தற்போதைய நடைமுறையின்படி ஜூன் மாதத்திற்கான வழக்கமான ரூ.1,000 உரிமைத் தொகையானது எவ்விதத் தடையுமின்றி இன்று காலையிலேயே பெண்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது.
