ஜகபர் அலி கொலை வழக்கு... 4 பேர் அதிரடி கைது!

இவர், திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கனிம வள கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதாரங்களுடன் பல முறை மனு கொடுத்து வந்துள்ளார். இதன் காரணமாக கனிம வள கொள்ளையர்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வந்தார். எனினும், தொடர்ந்து இதுபோன்று மனுக்களை கொடுத்து வந்தார். இந்நிலையில் ஜனவரி 10ம் தேதி ஜகபர் அலி புதுக்கோட்டை கோட்டாட்சியரிடம் கனிம வள கொள்ளை குறித்து மனு அளித்துள்ளார். சில குவாரிகளின் பெயர்களுடன் பல ஆதாரங்களையும் இணைத்து பல நூறு கோடிக்கான கனிம வள கொள்ளை நடந்துள்ளதாகவும், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஜகபர் அலி, பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற டிப்பர் லாரி மோதியதில் ஜெகபர் அலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கனிம வள கொள்ளைக்கு எதிராக தொடர்ந்து போராடிய சமூக ஆர்வலர் ஜகபர் அலி, கடைசியாக ஜனவரி 10 ம் தேதி புதுக்கோட்டை கோட்டாட்சியரிடம் பல ஆதாரங்கள், ஆவணங்களுடன் மனு கொடுத்த அடுத்த 7 நாட்களில் டிப்பர் லாரி மோதி உயிரிழந்தது சந்தேகத்தை எழுப்புவதாக குற்றம் சாட்டியுள்ளனர் . தமிழகத்தில் கனிம வளக் கொள்ளையை எதிர்த்த நேர்மையான அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என 100க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே, ஜகபர் அலியும் திட்டமிட்டு கல்குவாரி அதிபர்களால் கொல்லப்பட்டிருக்கலாம். இந்நிலையில், கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் கல்குவாரி சம்பந்தப்பட்ட நபர்கள் ஜெகபர் அலியை திட்டமிட்டு கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. மேலும் இதையடுத்து, ஜேசிபி மற்றும் லாரி உரிமையாளர் முருகானந்தம் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க