ஜெயிலர் இசை வெளியிட்டு விழாவில் ஏற்பாட்டில் ஊழியர் படுகாயம்!!

 
ஜெயிலர்

'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை ஜூலை 28ம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்த  படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக அலங்கார விளக்கு அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது மின்சாரம் தாக்கி 15 அடி உயரத்தில் இருந்த விழுந்து வட மாநில இளைஞர் படுகாயம் அடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜெயிலர்


சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில்   'ஜெயிலர்' திரைப்படம்   ஆகஸ்ட் 10ம் தேதி திரையங்குகளில் வெளியாக இருக்கிறது. ரசிகர்கள் ஆவலுடன் இதற்காக காத்து கிடக்கின்றனர். இதனையடுத்து ஜெயிலர் திரைப்பட  இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெயிலர்


இயக்குனர் நெல்சன் இயக்கத்தில்  உருவான இப்படத்தில்   மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உட்பட பல முண்ணனி திரை நட்சத்திரங்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web