மாஸ் வீடியோ!! ஜூலை 28ல் ”ஜெயிலர்” ஆடியோ ரிலீஸ்!!

 
ஜெயிலர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அடுத்த படமான ஜெயிலர் தற்போது திரைக்கு வரத் தயாராகியுள்ளது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில்   மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உட்பட பல முண்ணனி நட்சத்திரங்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.  


 

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகியுள்ள இப்படத்திற்கான இசை  அனிருத் . சமீபத்தில்   'ஜெயிலர்' படத்தின் காவாலா, 'இது டைகரின் கட்டளை' பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  

ஜெயிலர்

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை  28ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்த வீடியோ ஒன்றையும் தயாரிப்புநிறுவனமான சன்பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web