அட... ரிலீசாகும் முன்னே சாதனை படைத்த ஜெயிலர்!!

 
ஜெயிலர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்   இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நாளை வெளியாக உள்ள திரைப்படம் ஜெயிலர். இந்த படத்திற்கு உலகம் முழுவதும்பெரும் எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துள்ளன.  இப்படத்தில், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன்  உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பில் உருவான  ஜெயிலர் படத்தின் பாடல்கள், டிரெய்லர்  மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.  ஜூலை 28ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஆகஸ்ட் 6ம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பானது.  இந்த படத்திற்கான டிக்கெட் முன்பதிவு  ஆகஸ்ட் 5ம் தேதி தொடங்கிய நிலையில், முதல் 5 நாட்களுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத்தீர்ந்தன.   தொடர் விடுமுறை வருவதால் முன்பதிவு செய்யும் வேலையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு இணையதளமான BookMyShow ல் திங்கட்கிழமை வரை மொத்தம் 6,12,000 டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன.


 


 சனிக்கிழமையன்று சுமார் 85.53 கே டிக்கெட்டுகளும், ஞாயிற்றுக்கிழமை 233.15 கே டிக்கெட்டுகளும், திங்கட்கிழமை சுமார் 293.33 கே டிக்கெட்டுகளும் விற்பனையாகி உள்ளன.  ஜெயிலர் திரைப்படத்திற்கு சிங்கப்பூர் சினிமா சந்தையில் அதிகம் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதே போல்  வட அமெரிக்க சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் முதல் 5 தமிழ் திரைப்படங்களில் ஜெயிலரும் உள்ளது.அமெரிக்காவில் திங்கட்கிழமை வரை பிரீமியர் அட்வான்ஸ் விற்பனையில் சுமார் 6,64,000 டாலர் மதிப்புள்ள டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன. இது விஜயின் பீஸ்டை விட அதிகமாகும். விஜய் மற்றும் பூஜா ஹெக்டே முக்கிய வேடங்களில் நடித்த பீஸ்ட் படத்திற்கு, சுமார் 6,58,000 டாலர் மதிப்புள்ள டிக்கெட்டுகள் விற்பனையாகி இருந்தன. மொத்தம் சுமார் ரூ 6.86 கோடி மதிப்பிலான ஜெயிலர் திரைப்படத்தின் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன.

ஜெயிலர்

இதன் மூலம், ரஜினிகாந்தின் கபாலி (ரூ.15.89 கோடி), மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் (ரூ.8.52 கோடி), ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய் குமார் நடித்த 2.0 (ரூ.8.12 கோடி) போன்ற படங்களின் வரிசையில் ஜெயிலரும் இணைந்துள்ளார். விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள பொன்னியின் செல்வன் 2 (ரூ. 6.09 கோடி). வெளிநாடுகளில் இதுவரை ரிலீசான அத்தனை படங்களின் சாதனைகளையும் ஜெயிலர் படத்தின் டிக்கெட் முன்பதிவு எண்ணிக்கையை முறியடித்துள்ளது.

இது தவிர, பெங்களூருவில் ஆகஸ்ட் 10-ம் தேதி காலை 6 மணிக்குத் தொடங்கும் ஷோவுக்கான டிக்கெட்டுகள் ரூ.800 முதல் ரூ.1,400 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 10-ம் தேதி பெங்களூரில் அதிக எண்ணிக்கையிலான காட்சிகள் ஜெயிலருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.தமிழ்நாட்டில் ‘ஜெயிலர்’ படம் முதல் நாளில் தோராயமாக ரூ.25 கோடி வரை வசூல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  காலை 9 மணிக்குதான் முதல் காட்சி தொடங்குவதால் குறைந்தது வசூல் ரூ.17-18 கோடியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதேபோல் உலகளவில் இப்படம் முதல் நாளில்  சுமார் ரூ.50 கோடிக்கும் மேலாக வசூல் செய்யலாம் என உறுதியாக நம்பப்படுவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web