ரெக்கார்ட் பிரேக்!! ஜெயிலர் முதல் நாள் வசூல் சாதனை!!

 
ஜெயிலர்

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும்  ‘ஜெயிலர்’ திரைப்படம்   வெளியானது. இந்த திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள்  வெளியாகியுள்ளது.உலகம் முழுவதும் ‘ஜெயிலர்’ திரைப்படம் கிட்டத்தட்ட 72 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை நாளில் வெளியானதால்  தமிழகத்தில் மட்டும் ரூ24 கோடி வசூல் செய்துள்ளது.

ஜெயிலர்

 கேரளா, கர்நாடகா, ஆந்திராவிலும் முறையே 6 கோடி ரூபாய், 10 கோடி ரூபாய், 10 கோடி ரூபாயை வசூலித்துள்ளது    அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 1.45 மில்லியன் டாலர்களை வசூலித்து ‘ஜெயிலர்’ வசூல் சாதனை படைத்துள்ளது. இது நெல்சனின் முந்தைய படமான ‘பீஸ்ட்’ படத்தின் முதல் நாள் கலெக்‌ஷனை 1.37 மில்லியன் அமெரிக்க டாலர் விட அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜெயிலர் திரைப்படம் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்   மோகன் லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு உட்பட பல முண்ணனி நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.  

ஜெயிலர்


இந்த படத்தின் பாடல்கள் அனைத்து வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் செண்டிமெண்ட் பாடலாக படத்தில் வரும் ரத்தமாரே பாடல் ரசிர்களின் மனதை உருக்கும் வகையில்  அமைந்துள்ளது. இந்நிலையில், ரசிகர்களின் மனதை மேலும் உருகச்செய்யும் வகையில்  ஏஐ தொழில்நுட்ப வல்லுனர் செய்துள்ளனர்.
 அனிருத் இசையமைப்பில்  விக்னேஷ் சிவன் எழுதிய  ரத்தமாரே  பாடலினை விஷால் மிஸ்ரா சிறப்பாக பாடியிருப்பார். மிகவும் மெலடி பாடலான இந்த பாடலை எஸ்பிபி   வெர்சனில் உருவாக்கிவிட்டார்கள்.  எஸ்பி பாலசுப்பிரமணியம் உயிரோடு மீண்டும் வந்து விட்டாரோ என தோன்றும் வகையில் வடிவமைத்துள்ளார்கள்  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web