பிரபல பாடகர் யோயோ சிங்கின் மருமகன் சாலை விபத்தில் பலி... பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்து திரும்பியபோது விபரீதம்… !

 
சாலை

 

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த கார் விபத்தில் பிரபல பாடகர் யோ யோ ஹனி சிங்கின் உறவினர் விதித் ஓலாக் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் இசைத் துறையினர் மற்றும் இரு குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜலந்தர் போலீஸ் லைன்ஸ் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் இன்று (நவம்பர் 1) அதிகாலை சுமார் 3 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. நண்பரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்கள் சென்ற வோக்ஸ்வாகன் கார் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த மாநகராட்சி டிராக்டர்-டிராலி மீது மோதியது.

இந்த விபத்தில் விதித் ஓலாக் மற்றும் ஆரவ் தல்வார் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். விதித், பஞ்சாபி இசை நிறுவனமான ஸ்பீடு ரெக்கார்ட்ஸ் உரிமையாளர் தினேஷ் ஓலாக்கின் மகனும், பாடகர் யோ யோ ஹனி சிங்கின் உறவினரும் ஆவார். மற்றொருவரான ஆரவ் தல்வார், ஜலந்தரில் உள்ள பாப்பி ஸ்வீட்ஸ் நிறுவன உரிமையாளரின் மகன்.

விபத்து நடந்தபோது மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மேம்பாலத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.தமிழில் அனிருத் இசையில் வெளியான 'எதிர்நீச்சல்' திரைப்படத்தில் ஹனி சிங் பாடல் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.