போட்றா வெடிய...ஏப்ரல் 27ம் தேதி கோவையில் ஜல்லிக்கட்டு... துணை முதல்வர் தொடங்கி வைப்பு!

 
ஜல்லிக்கட்டு

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்று ஜல்லிக்கட்டு. அந்த வகையில் மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய ஜல்லிக்கட்டுகள் உலக பிரசித்தி பெற்றது. இந்த ஜல்லிக்கட்டை பார்க்க பல்வேறு நாடுகளில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மதுரையில் குவிவார்கள்.

 

கோவை

அந்த வகையில் மதுரையில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி, 13,14,15 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான காளைகள், நூற்றுக்கணக்கான காளையர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கார், பைக், தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

 

தற்போது ஜல்லிக்கட்டு போட்டிகள் மற்ற மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொங்கு மண்டலமான கோவையிலும் கடந்த 2018 மற்றும் 2022ம் ஆண்டு நடைபெற்றது. கடந்த 2 வருடங்களாக நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு போட்டி மீண்டும் கோவையில் நடைபெறவுள்ளது.

அந்த வகையில், செட்டிபாளையம் அருகே L&T பைபாஸ் சாலையில் 60 ஏக்கர் நிலத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 27-ம் தேதி நடக்க நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைக்க உள்ளார். 

ஜல்லிக்கட்டு

இதனையடுத்து ஜல்லிக்கட்டு போட்டிக்கான மேடை, வாடிவாசல், காளைகளை சேகரிக்கும் இடம் போன்ற வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த போட்டியில் மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 500 க்கும் மேற்பட்ட காளையர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் ஆம்புலன்ஸ் செல்வதற்கான வசதிகளும், மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ உதவி கிடைப்பதற்காக கோவை அரசு மருத்துவமனை தயார் நிலையில் இருக்கும் படி ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

From around the web