ஜம்மு - காஷ்மீரில் அதிரடி என்கவுன்டர்! லஷ்கர் கமாண்டர் லத்தீப் பட் சுட்டுக்கொலை
ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில், லஷ்கர் அமைப்பின் முக்கிய கமாண்டர் லத்தீப் பட் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் லத்தீப் பட், அப்பகுதியில் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட பகுதியைச் சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.
இந்த மோதலில் லஷ்கர் கமாண்டர் லத்தீப் பட் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குல்காம் பகுதியில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கை, பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
