பயங்கர சாலை விபத்து! அமைச்சர் தீபிகா பாண்டே சிங்கின் மகள் உள்பட 4 பேர் பலி!

 
ஜார்கண்ட்

 

ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் அதிகாலை நடந்த சாலை விபத்தில், மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தீபிகா பாண்டே சிங்கின் மகள் திரிஷா சிங் உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஜாம்ஷெட்பூரின் சோனாரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டோமுஹானி மரைன் டிரைவ் பகுதியில் இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலையில் பழுதாகி நிறுத்தப்பட்டிருந்த கனரக டிரக் மீது, அதே வழியாக வந்த கார் பின்னால் இருந்து மோதியதாக கூறப்படுகிறது. மோதல் மிகவும் வலுவாக இருந்ததால் கார் பலத்த சேதமடைந்தது. காரில் பயணம் செய்த 4 பேரும் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் ஜார்க்கண்ட் மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் தீபிகா பாண்டே சிங்கின் மகள் திரிஷா சிங்கும் ஒருவர். மற்ற 3 பேரும் காரில் பயணம் செய்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் தொடர்பாக ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அமைச்சர் தீபிகா பாண்டே சிங்கின் குடும்பத்தினருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.