இந்த வருடம் முழுவதும் ஜப்பானில் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை... என்ன காரணம் தெரியுமா?!

ஜப்பானில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக எக்ஸ்போ கண்காட்சி நடைபெற்று வருகிறது. 2020ல் கொரோனா காரணமாக இந்த கண்காட்சி ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து 2022 ல் துபாயில் உலக எக்ஸ்போ கண்காட்சி நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2025 ல் ஜப்பானில் ஒஸாகா நகரில் உலக எக்ஸ்போ கண்காட்சி 2025 நடைபெற இருக்கிறது.
இதில் உலக நாடுகள் அனைத்தும் கலந்து கொண்டு அரங்குகளை அமைத்து தங்கள் நாட்டின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை காட்சிப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒசாகாவில் உலக எக்ஸ்போ கண்காட்சி 2025க்கான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஒசாகாவில் பொது இடங்களில் சிகரெட், இ-சிகரெட் உட்பட அனைத்து போதைப் பொருட்களை பயன்படுத்தி புகைப்பிடிக்க அந்த நகர மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முழுவதும் இந்தத் தடை அமலில் இருக்கும் எனவும் மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!