அந்தரத்தில் தொங்கியபடி ஒரே நிமிடத்தில் 67 குட்டிக்கரணங்கள்... 9 வயது ஜப்பான் சிறுமி உலக சாதனை!

 
ஜப்பான்

 

ஜப்பானைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர், அந்தரத்தில் தொங்கும் வளையத்தில் ஒரே நிமிடத்தில் 67 முறை குட்டிக்கரணம் அடித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

Japanese youngster breaks dizzying aerial hoop record after being inspired by her sister | Guinness World Records

ஒகினாவா மாகாணத்தின் நாககாமி பகுதியைச் சேர்ந்த சுசு ஹேபாரு என்ற சிறுமி, ஏரியல் ஹூப் எனப்படும் அந்தரத்தில் தொங்கும் வளையத்தில் சாகசம் செய்வதில் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில், பெண்களுக்கான பிரிவில் ஒரு நிமிடத்தில் அதிக குட்டிக்கரணங்கள் அடிக்கும் சாதனை முயற்சியில் ஈடுபட்டார். அப்போது தொடர்ந்து சுழன்று 67 குட்டிக்கரணங்களை அடித்து சாதனை படைத்தார்.

சுசுவுக்கு இந்தச் சாகசத்தின் மீது ஆர்வம் ஏற்பட அவரது மூத்த சகோதரி முக்கியக் காரணமாக இருந்துள்ளார். சகோதரி ஏரியல் ஹூப் பயிற்சி செய்வதைப் பார்த்து தானும் பயிற்சி மேற்கொள்ளத் தொடங்கிய சுசு, கடின உழைப்பால் இந்தச் சாதனையை எட்டியுள்ளார்.

கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி நடைபெற்ற இந்தச் சாதனை முயற்சியை கின்னஸ் உலக சாதனை நிறுவனம் ஆய்வு செய்து அங்கீகரித்துள்ளது. இதையடுத்து 2026-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி இந்தச் சாதனை குறித்த தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.சிறு வயதிலேயே வியக்க வைக்கும் திறமையை வெளிப்படுத்தியுள்ள சுசுவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.