ஜப்பான் ஓபன் சாதனை... விராட் கோலியுடனான உரையாடல் தான் திருப்புமுனை - பி.வி. சிந்து நெகிழ்ச்சி!

 
சிந்து விராட்

இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் நட்சத்திரமான பி.வி. சிந்து, ஜப்பான் ஓபன் சூப்பர் 750 தொடரின் இறுதிப்போட்டியில் ஜப்பானின் அகானே யமகுச்சியை வீழ்த்தி தனது முதல் சூப்பர் 750 பட்டத்தைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

தமது விளையாட்டு வாழ்க்கையின் மிகவும் சோதனையான கட்டத்தில், தொடர்ச்சியான காயங்கள் மற்றும் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காத மனச்சுமையால் தவித்த போது இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியைத் தொடர்பு கொண்டு ஆலோசனை நாடியுள்ளார். சிந்து அனுப்பிய குறுஞ்செய்திக்குச் சில நிமிடங்களிலேயே விராட் கோலி பதிலளித்ததுடன், அடுத்த நாளே அவரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்: அசத்தும் இந்தியா! பி.வி. சிந்து அரையிறுதிக்கு தகுதி!

தங்களுக்குள் பேசிக் கொண்டவை தங்களுக்குள் மட்டுமே என்றாலும், அந்தச் சந்திப்பும் அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் தனது வாழ்க்கையைப் பார்க்கும் பார்வையையே மாற்றிவிட்டதாக சிந்து நன்றியுடன் தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய உச்சத்தைத் தொட்ட மற்றொரு விளையாட்டு வீரரின் வழிகாட்டுதலும் ஆலோசனையும் தனக்கு மிகவும் கடினமான தருணத்தில் உறுதுணையாக இருந்ததை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.