ஜப்பானில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

 
ஜப்பான்

 

ஜப்பானின் ஷிமா நகருக்கு தென்கிழக்கே கடலோரப் பகுதியில் இன்று (நவம்பர் 1) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி அதிகாலை 3.45 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவாகியுள்ளது.

ஷிமா நகரில் இருந்து தென்கிழக்கே சுமார் 58 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட நில அதிர்வால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஜப்பான் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய புவியியல் பகுதியில் அமைந்துள்ளதால், அங்கு அவ்வப்போது நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.

உயிரிழப்புகள் அல்லது காயங்கள் ஏற்பட்டதா என்பது குறித்தும் உறுதியான தகவல் இல்லை. நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பாதிப்புகள் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகும்போது தெரியவரும்.