ஜப்பானில் 100 வயதைக் கடந்த முதியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்து புதிய சாதனை!
Sep 18, 2026, 16:40 IST
ஜப்பானில் 100 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்களின் மொத்த எண்ணிக்கை முதன்முறையாக ஒரு லட்சத்தைக் கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஜப்பான் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அண்மைய புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் 100 வயதைக் கடந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,07,677 ஆக உயர்ந்துள்ளது.
இதில் குறிப்பிடத்தக்கக் கூறாக, ஒட்டுமொத்த நூறாவது வயதைக் கடந்தவர்களில் சுமார் 88 சதவீதத்திற்கும் அதிகமானோர், அதாவது 94,298 பேர் பெண்களாவே உள்ளனர்.
நவீன மருத்துவ வசதிகளின் தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் அந்நாட்டு மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறை காரணமாகவே இந்த நீண்ட ஆயுள் சாத்தியமாகியுள்ளதாக ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார அமைச்சகம் தெரிவிக்கின்றன.
