ஜவஹர்லால் நேரு இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர்... பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் கடும் தாக்கு... !

 
modi

 இந்தியாவில் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி  குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அடுத்த நாளான  பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதனையடுத்து   இன்று  குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி மாநிலங்களவையில் பதில் அளித்து வருகிறார்.  அதில், “ஜனாதிபதி திரௌபதி முர்மு தனது உரையில் இந்தியாவின் ஆற்றல், வலிமை மற்றும் பிரகாசமான எதிர்காலம்  குறித்து பேசியிருந்தார். அன்று  தான்  குஜராத் முதல்வராக இருந்தபோதும், இன்று இந்தியப் பிரதமராக இருந்தபோதும் தனது மந்திரம் கனவு எப்போதும்  ஒன்றுதான்.  காங்கிரஸ்  கட்சி இந்தியாவின் தேசிய மற்றும் உள்நாட்டு பாதுகாப்பை பராமரிக்க தவறிவிட்டது. இந்திய நிலத்தின் பெரும்பான்மையான பகுதிகளை  காங்கிரஸ்  எதிரிகளிடம் ஒப்படைத்து விட்டது.  அதே போல் நாட்டின் ராணுவத்தை நவீனமயமாக்குதலை நிறுத்தி வைத்திருந்தது.   அதே காங்கிரஸ்  இன்று தேசிய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு குறித்து பேசி வருகிறது” எனக் கூறினார். 

modi
 தென் இந்தியாவிற்கு தனிநாடு என்ற கொள்கை குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி டிகே சுரேசுக்கும் மோடி பதில் அளித்த பிரதமர் மோடி  இந்தியாவில் ”வடக்கு-தெற்கு” பிரிவினையை  உருவாக்கியதிலும் பெரும் பங்கு காங்கிரஸ் தான் என்பதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர்.  
காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்தையே வேரோடு சாய்த்துள்ளது. அதற்கு எதிரானவைகளையே செய்தது.  தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை கலைத்து இந்தியாவை   பிளவுபடுத்துவதையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டது. அதே சிந்தனை இருப்பவர்களிடம்  நாட்டை உடைக்க முயற்சிப்பவர்களுடன் காங்கிரஸ் இணைந்துள்ளது. சமீபகாலமாக  வடக்கு  தெற்கு பிரிவினை குறித்து பேசி வருகிறது.  இந்தியா முழுவதும் SC / ST மற்றும் OBC க்கு  காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இடஒதுக்கீட்டில் பாரபட்சம் கொண்டிருந்தன. பாஜக அரசு தான் இந்தியாவிலேயே முதன் முறையாக பழங்குடியின பெண் ஒருவரை குடியரசு தலைவராக்கி அழகு பார்த்தது.  அதே போல் இவர்களுக்காக குரல் கொடுத்த DR.அம்பேத்கருக்கு கூட பாரத ரத்னா விருது வழங்கவில்லை. தன்னுடைய கட்சி, கட்சி சார்ந்த உறுப்பினர்கள்,  “குடும்ப உறுப்பினர்களுக்கு”  மட்டுமே பாரத ரத்னா விருதை தொடர்ந்து வழங்கி வந்தது.   மத்தியில் பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைந்தபோதுதான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது என பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்.  
 

அம்பேத்கர்


எதிர்க்கட்சிகள்  நாடாளுமன்றத்தில் முன்வைக்கும்  விமர்சனங்களுக்கு நன்றி என மோடிகூறியுள்ளார்.   மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் பேச்சு கவனிக்கத் தக்கதாக அமைந்தது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில்   400 இடங்களில் பாஜக  வெற்றிபெற கார்கே ஆசி வழங்கியுள்ளார். அதே நேரத்தில் இந்தியா முழுவதும் காங்கிரஸ்   40 இடங்களையாவது  கைப்பற்ற பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.  மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் படுமோசமான நிலையில் இருந்தது.  பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில்  உலக அளவில் முதல் 5 பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது எனவும் கூறியுள்ளார்.   பிரதமர் ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதத்தை மாநிலங்களவையில்  மோடி வாசித்துக் காட்டினார்.  இடஒதுக்கீட்டை எதிர்த்த காங்கிரஸ், தலித், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு எதிராக செயல்பட்டு வந்தது.  
 காங்கிரஸ் பொதுத்துறை நிறுவனங்களை விற்பதில் முனைப்பு காட்டியது. குறிப்பாக காங்கிரஸ் காலத்தில் பிஎஸ்என்எல் மூடப்படும் நிலையில் இருந்ததாகவும் தற்போது  5G நோக்கி நகர்வதாகவும் கூறினார். அத்துடன் இந்தியா ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலையாக இந்தியா திகழ்வதாகவும் கூறியுள்ளார்.  3 வது முறையாக பாஜக ஆட்சியைப் பிடிப்பது வெகு தொலைவில் இல்லை  இந்திய மக்கள் தற்போதே மோடி 3.o  என அழைக்கத் தொடங்கிவிட்டனர் “ எனக் கூறியுள்ளார்.   

From around the web