ஜெயலலிதாவின் நம்பிக்கைப் பெற்ற சி. விஜயபாஸ்கர்... அரசியல் பயணமும், திருப்பங்களும்!

 
சி. விஜயபாஸ்கர்

அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவராகவும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்ற தலைவராகவும் விளங்கிய முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் அரசியல் பயணத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு முதன்முறையாக எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சி.விஜயபாஸ்கர்

2011-ல் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து 2016 தேர்தலிலும் வெற்றி பெற்று, 2017 அமைச்சரவை மாற்றத்திற்குப் பிறகும் சுகாதாரத் துறை அமைச்சராகத் தன் பணியைத் தொடர்ந்தார். 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக அலையையும் தாண்டி விராலிமலைத் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றார்.

2026 சட்டமன்றத் தேர்தலிலும் விராலிமலைத் தொகுதியில் வெற்றி பெற்ற சி. விஜயபாஸ்கர், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். அதிமுகவில் இருந்து விலகிய அவர், தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்து அரசியல் களத்தில் புதிய பயணத்தை ஏற்படுத்தியுள்ளார்.