ஜெயலலிதா கார் ஓட்டுனரின் அண்ணன் திடீர் கைது!!

 
கொடநாடு

தமிழகத்தின் முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவிற்கு சொந்தமான  கொடநாடு பங்களாவில்  2017 ம் ஆண்டு கொள்ளை முயற்சி நடைபெற்றது. அங்கே காவலாளியாக இருந்த தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் திடீர் என உயிர் இழந்தார்.  

கொடநாடு

இதன் பிறகு இந்த வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.  அப்போது கொடநாடு வழக்கில் சாட்சியங்களை கலைத்ததாக கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர்  காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.   இதனையடுத்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.  இந்நிலையில் சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள எருமைப்பட்டி பகுதியில் உள்ள வாசுதேவனுக்கு சொந்தமான இடத்தை 5 கோடிக்கு துரையரசுக்கு விற்பனை செய்தார். நிலம் வாங்குவதில் இடைத்தரகராக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் தனபால் இருந்துள்ளார்.

கொடநாடு

 பத்திரப்பதிவு முடிந்த நிலையில் குறிப்பிட்டப்படி துரையரசு ரூ 5 கோடி  பணம் கொடுக்காமல் தலைமறைவாகிவிட்டார் . இதனையடுத்து வாசுதவேன் கொடுத்த புகாரின் பேரில் இடைதரகராக செயல்பட்ட  ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜின் அண்ணன் தனபால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன்  முக்கிய குற்றவாளியாக இருக்கும் துரையரசுவையும் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web