என் மகன்களை எத்தன வருஷம் ஆனாலும் விடமாட்டேன்... ஜெயம் ரவி ஆவேசம்!

 
ஜெயம் ரவி

  
 
தமிழ் சினிமாவில் நடிகர் ஜெயம் ரவியின் விவாகரத்து விவகாரம்  தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக். இவர்  கடந்த சில வாரங்களுக்கு முன் மனைவியை விவாகரத்து செய்வதாக  அறிக்கை வெளியிட்டார். இது குறித்து அவரது மனைவி ஆர்த்தி  தனக்கு தெரியாமலேயே ஜெயம் ரவி இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறினார்.  ஜெயம் ரவிக்கும் பாடகி கெனிஷாவுக்கும் இருக்கும் தொடர்பே அவருக்கும் ஆர்த்திக்கும் இடையே விரிசல் ஏற்படுவதற்கு காரணம் எனக் கூறப்பட்டது.  

ஜெயம் ரவி


இதுபற்றி மெளனம் காத்து வந்த ஜெயம் ரவி, கடந்த சில நாட்களுக்கு முன்   பிரதர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில்  “iந்த சர்ச்சைகள் குறித்து ஓப்பனாக பேசினார். அதன்படி விவாகரத்து முடிவு  ஆர்த்தியின் பெற்றோருடன் கலந்து ஆலோசித்த பிறகே எடுக்கப்பட்டது. அதே நேரத்தில்  கெனிஷா உடன் தன்னை தொடர்பு படுத்தி பேசுவது தவறானது என கூறினார்.
கெனிஷா ஒரு பாடகி. அவர் பிரபல மனநல ஆலோசகர். மன அழுத்தத்தில் இருந்த பலரை அவர் மீட்டெடுத்து உள்ளதாக ஜெயம் ரவி கூறினார். மேலும் கெனிஷா உடன் சேர்ந்து தான் ஒரு ஆன்மிக மையம் ஒன்றை திறக்க இருப்பதாகவும் கூறினார்.  அத்துடன் வாழு வாழவிடு என்றும் கேட்டுக்கொண்டார்.  

ஜெயம் ரவி


இந்நிலையில், தன் மகன்கள் குறித்து  “என்னுடைய எதிர்காலமே எனது மகன்கள் ஆரவ் மற்றும் அயான் தான். அவர்களை என்னுடைய கஸ்டடியில் எடுக்க போராடுவேன். விவாகரத்துக்காக 10 ஆண்டுகள் என்ன 20 ஆண்டுகள் கூட கோர்ட்டில் போராட தயாராக இருக்கிறேன். எனது சந்தோஷமே என்னுடைய மகன்கள் தான். என்னுடைய மகனை வைத்து நான் படம் தயாரிக்கவும் திட்டமிட்டு இருந்தேன். அது என்னுடைய கனவு ” என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்தார்.
 
ஆர்த்தி உங்களுடன் சமரசம் செய்ய விரும்புகிறாரா என்கிற கேள்விக்கு “ அவரிடம் சமரசம் செய்யும் எண்ணம் இருந்தால் ஏன் காதலி பற்றி பரப்ப வேண்டும். இந்த விவாகரத்தில் கெனிஷாவுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை ” என ஜெயம் ரவி ஓப்பனாகவே கூறினார்.   

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!