ஜேஇஇ முதன்மைத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு!

 
செமஸ்டர்

 ஜேஇஇ 2ம் கட்ட முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டுக்கான ஜேஇஇ 2ம் கட்ட முதன்மைத் தேர்வு  4ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறும் நிலையில், தேர்வுக்கான ஹால் டிக்கெட்கள் வெளியாகியுள்ளன. இந்தியா  முழுவதும் ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகிய கல்வி நிறுவனங்கள், புகழ்பெற்ற மத்திய அரசின் கல்வி நிலையங்களாக அறியப்படுகின்றன. ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக, ஜேஇஇ மெயின் முதல்நிலை, அட்வான்ஸ்டு முதன்மைத் தேர்வு என நடத்தப்பட்டு வருகிறது.

தேர்வுக்கு தயாராகும் முன் இதை தெரிஞ்சுக்கோங்க!!நேரடி செமஸ்டர் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு!!

2024க்கான ஜேஇஇ முதல் அமர்வு தேர்வுகள் ஜனவரி 24ம் தேதி தொடங்கியுள்ளன.ஜனவரி 27, 29, 30, 31 மற்றும் பிப்ரவரி 1  தேதிகளில் நடைபெற்றன. நாடு முழுவதும் 291 நகரங்களிலும் இந்தியாவுக்கு வெளியே 21 நகரங்களிலும் தேர்வுகள் நடத்தப்பட்டன.  இந்நிலையில், ஜேஇஇ 2ம் கட்ட முதன்மைத் தேர்வுகள் ஏப்ரல் 4 முதல் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 3ல் தொடங்கி மார்ச் 2 வரை நடைபெற்றது. இதற்காக நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை விண்ணப்பித்துள்ளனர். தினமும் காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும் பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரையிலும் தேர்வுகள் நடைபெறுகிறது.

தேர்வுக்கு தயாராகும் முன் இதை தெரிஞ்சுக்கோங்க!!நேரடி செமஸ்டர் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு!!


குறிப்பாக ஏப்ரல் 4, 5, 6, 8, 9 தேதிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான முதல் தாள் நடத்தப்படுகிறது.  ஏப்ரல் 12ம் தேதி, பி.ஆர்க்., பி.பிளானிங். படிப்புகளுக்குத் தனித்தனியாகவும் ஒரே தேர்வாகவும் மெயின் தேர்வு நடைபெறுகிறது. இவற்றில் 4, 5 மற்றும் 6  தேதிகளில் தேர்வு எழுத உள்ள தேர்வர்களுக்காக ஹால் டிக்கெட் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 8,9 மற்றும் 12ம் தேதி தேர்வு எழுதவிருக்கும் தேர்வர்களுக்கு பின்னர் வெளியிடப்படும் என என்.டி.ஏ அறிவித்துள்ளது. தேர்வர்கள் jeemain.nta.ac.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு, https://jeemain.nta.nic.in/ மற்றும் 011- 40759000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web