JEE தேர்வு பயத்தால் சோகம்.... மேம்பாலத்தில் இருந்து குதித்து மாணவி தற்கொலை!

 
jee

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் பல்வேறு உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இங்கு வந்து தங்கிப் படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்தப் பயிற்சி மையங்களில் பயிலும் இளம் மாணவர்கள் மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்து கொள்ளும் துயரச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

தேர்வு காவலர் கேட் ஜேஇஇ நீட் மாணவி மாணவர்கள்

இந்நிலையில் பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது மாணவி ஜெயஸ்ரீ இத்தகைய விபரீத முடிவை எடுத்துள்ளார். இவர் ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்குத் தன்னை தயார்படுத்திக் கொள்வதற்காகக் கடந்த ஜனவரி மாதம் கோட்டா நகருக்கு வந்துள்ளார். அங்குள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்த அவர், விடுதியில் தங்கித் தீவிரமாகப் படித்து வந்ததாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தன்று இரவு 11 மணியளவில் மாணவி ஜெயஸ்ரீ கோட்டா-ஜாலவார் மேம்பாலத்தில் இருந்து திடீரென கீழே குதித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் பலனின்றி அந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த ஆண்டில் மட்டும் கோட்டா நகரில் நடைபெறும் ஏழாவது தற்கொலைச் சம்பவம் இதுவாகும்.