சென்டர் மீடியனில் ஜீப் மோதி விபத்து; 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி - 3 பேர் படுகாயம்!

 
ஜீப் செண்டர் மீடியன்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நான்கு வழிச்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு ஜீப் ஒன்று மேம்பாலத்தின் மையத்தடுப்பில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நத்தம்பட்டி நான்கு வழிச்சாலை பகுதியில் இளைஞர்கள் மற்றும் குடும்பத்தினர் பயணித்த சொகுசு ஜீப் ஒன்று அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம், அங்கிருந்த நான்கு வழிச்சாலை மேம்பாலத்தின் நடுவே அமைக்கப்பட்டிருந்த சென்டர் மீடியன் சுவரில் மிகக் கொடூரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜீப்பின் முன்பகுதி முற்றிலுமாக நொறுங்கியது.

விபத்து மரணம் கொலை  தற்கொலை

வாகனத்திற்குள் இடிபாடுகளில் சிக்கியவர்களில் 3 பேர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் மிகக் கடுமையான படுகாயங்களுடன், உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவசர அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

விபத்து குறித்து நத்தம்பட்டி பகுதி பொதுமக்களால் உள்ளூர் காவல் நிலையத்திற்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

கொலை தற்கொலை வெட்டி மரணம் விபத்து

உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து ஓட்டுநரின் கண் அயர்வால் ஏற்பட்டதா அல்லது அதிவேகத்தின் காரணமாக நிகழ்ந்ததா என்பது குறித்து நத்தம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.