அரியானாவில் ஜீப் கவிழ்ந்து கோர விபத்து... குழந்தைகள் உட்பட 9 பேர் பலி!

 
ஜீப் விபத்து

அரியானா மாநிலத்தில் கால்வாயில் ஜீப் கவிழ்ந்து கோர விபத்திற்குள்ளானதில் குழந்தைகள் உட்பட 9 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அரியானா மாநிலத்தில், கால்வாயில் ஜீப் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் கால்வாயில் விழுந்த ஜீப், விழுந்த இடத்திலிருந்து சுமார் 50 கி.மீட்டர் தூரத்தில் இருந்து 55 கிலோ மீட்டர் தொலைவில் உடல்கள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

அரியானா மாநிலம், பதேஹாபாத் மாவட்டத்தில் 14 பயணிகளுடன் சென்ற ஜீப் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை இரவு பக்ரா கால்வாயில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 5 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 9 பேர் பலியானார்கள். மேலும் 3 பேர் மாயமானதாக போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், “பஞ்சாப் மாநிலம் பாசில்கா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டு வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். அடர்ந்த பனிமூட்டம் காரணமாக, சர்தரேவாலா கிராமம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், பக்ரா கால்வாயில் கவிழ்ந்தது.

விபத்து

இதுவரை 9 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் மூன்று பேரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. வாகனம் கால்வாயில் விழுந்த இடத்திலிருந்து சுமார் 50-55 கிலோமீட்டர் தொலைவில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பலியானவர்களில் ஐந்து பெண்கள், 11 வயது சிறுமி மற்றும் ஒரு வயது குழந்தை அடங்குவர். மீட்புப் பணியில் சுமார் 50 பேர் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web