பாம்புடன் போராடி குழந்தைகளை காப்பாற்றிய விசுவாசி ஜீவன்.. இறுதியில் நடந்த சோகம்!

 
ஹேண்ட்ரி 

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள அவசந்தோண்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வேந்திரன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தனது இரண்டு மகன்களுடன் வசித்து வரும் இவர், கடந்த 11 ஆண்டுகளாக வீட்டில் ஹேண்ட்ரி என்ற நாயை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தைகள் வீட்டின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அருகில் உள்ள முந்திரி தோப்பில் இருந்து 6 நீள பாம்பு வந்தது. இதைப் பார்த்த வீட்டு நாய் “ஹென்றி” அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை காலால் தள்ளியும் குறைத்தும் பாதுகாப்பான இடத்தில் சேர்த்தது. அப்போது பாம்பை விரட்ட நீண்ட நேரம் போராடிய நிலையில் நாயை பாம்பு கடித்தது. இதில் நாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

நீண்ட நேரம் கழித்து வீட்டுக்கு வந்த நாயின் உரிமையாளர் செல்வேந்திரன், மயங்கி கிடந்த நாயை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். நாயை பரிசோதித்த டாக்டர், நாய் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.குழந்தைகளை காப்பாற்றி 12 ஆண்டுகளாக குடும்பத்தில் ஒருவராக வளர்த்து வந்த நாய் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web