திருச்செந்தூர் கடலில் ஒதுங்கிய ஜெல்லி மீன்கள்.. அலறிய பக்தர்கள்.. உடல் முழுவதும் ஏற்பட்ட அரிப்பால் அவஸ்தை!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயிலின் முன்புறம் உள்ள கடற்கரையில் புனித நீராடி இறைவனை வழிபடுகின்றனர்.தற்போது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் உற்சவர் திருநாளையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கடலில் புனித நீராடவும் செய்கின்றனர்.. அப்படித்தான் நேற்றும் தினமும் பக்தர்கள் கடலில் நீராடினர். அப்போது திடீரென அவர்களின் உடலில் அரிப்பு ஏற்படுகிறது.
இதனால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கோவில் கடற்கரை பாதுகாப்பு அதிகாரிகளிடம், பக்தர்கள் இது குறித்து புகார் தெரிவித்தனர்.இதையடுத்து, அங்கிருந்த பணியாளர்கள், அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.. அப்போதுதான், ஜெல்லிமீன்கள் கரை ஒதுங்கியிருப்பதை பார்த்தனர். சுமார் 3 கிலோ எடையுள்ள பெரிய ஜெல்லி மீன் ஒன்று கரை ஒதுங்கியது.. அதனை அங்கிருந்து அப்புறப்படுத்திய தொழிலாளர்கள் கடற்கரை பகுதியில் குழி தோண்டி புதைத்தனர். அப்போது மாலையில் பக்தர்கள் கடலில் குளித்தபோது மீண்டும் வாலிபர் ஒருவருக்கு அரிப்பு ஏற்பட்டது..
கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த வாலிபர் கடலில் குளித்தபோது ஜெல்லிமீன் ஒன்று உடலில் குத்தி அரிப்பு ஏற்பட்டது. இதனால், கோவில் வளாகத்தில் உள்ள முதலுதவி மையத்தில் இளைஞருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு போலவே திருச்செந்தூர் கடலில் ஜெல்லி மீன்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.. சில நாட்களாக கரையில் சில உயிரினங்கள் மிதப்பதாகவும், அந்த உயிரினம் கண்ணாடி போல் ஜொலிப்பதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர்.. அருகில் சென்றதும் அது அவை அனைத்தும் ஜெல்லி மீன்கள் என்பது தெரியவந்தது.
இந்த ஜெல்லி மீன்கள் நாளுக்கு நாள் கரையில் கிடப்பதாக சொல்கிறார்கள்.. இந்த மீன்கள் ஆபத்தானவை.. விஷம் கொண்டவை.. மனித உடலில் பட்டால் தோல் நெருப்பு போல் உரிந்துவிடும்.. ஆனால், இதையறிம்மால் பக்தர்கள் கடலில் நீராடுகின்றனர். முன்னதாக, இதுகுறித்து கடலோர காவல்படையினர் கூறியதாவது, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் இதுபோன்ற ஜெல்லி மீன்கள் கடற்கரையில் காணப்படுகின்றன.. இவை கண்ணாடி போல இருந்தாலும், அதிக விஷத்தன்மை கொண்டவை. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு உடலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளனர்.
பெயரால் ஜெல்லி மீன் என்று அழைக்கப்பட்டாலும், அவை ஒரு வகை மீன் அல்ல.. கடல்வாழ் உயிரினங்களில் மிகவும் அழகானது ஜெல்லி மீன்கள். சிலர் அதை சொறி மீன் என்று அழைக்கிறார்கள். சமீப காலமாக திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் ஜெல்லி மீன்கள் அதிகளவில் காணப்படுகின்றன. எனவே ஜெல்லி மீனின் தன்மை குறித்து பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, ஜெல்லி மீன்களால் பக்தர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த கோவில் வளாகத்தில் உள்ள முதலுதவி மையத்தில் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடற்கரையில் எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா