ஜெம் வீரமணி பாலியல் வழக்கு... கார் ஓட்டுநர் பாலாவுக்கு 2 நாள் போலீஸ் காவல்!

 
வீரமணி

ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கார் ஓட்டுநர் பாலாவுக்கு 2 நாட்கள் போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் முக்கிய விவரங்களை சேகரிப்பதற்காக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

வீரமணி சாந்தி

ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட கார் ஓட்டுநர் பாலாவிடம் நேரில் விசாரணை நடத்தப் போலீசார் அனுமதி கோரியிருந்தனர். இதனைப் பரிசீலித்த நீதிமன்றம், பாலாவை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.

ஜெம் வீரமணி

நீதிமன்றத்தின் அனுமதியைத் தொடர்ந்து, ஓட்டுநர் பாலாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளனர். இந்த வழக்கில் மேலும் சில முக்கிய விவரங்களைச் சேகரிக்கவும், சம்பவம் தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்தவும் இந்த விசாரணை நடைபெறுகிறது.