சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் - ஜெசிகா பெகுலா அபார வெற்றி!

 
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் ஜெசிகா பெகுலா

அமெரிக்காவில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் முன்னணி இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சுவிட்சர்லாந்து வீராங்கனை சிமோனா வால்டர்ட்டை எதிர்கொண்டார்.

போட்டியின் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெசிகா பெகுலா 6-2, 6-2 என்ற நேர் செட்க கணக்கில் சுவிட்சர்லாந்து வீராங்கனையை எளிதில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றார்.