கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் உச்சவரம்பு ரூ.10,000 ஆக உயர்த்தத் திட்டம்!

 
நகைக்கடன் தங்கம்

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நகைக்கடன் அளவை உயர்த்துவது தொடர்பாக முக்கியத் திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன.

தமிழக கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களில் தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ. 9,000 வரை நகைக்கடன் வழங்கப்பட்டு வருகிறது.

நகைக்கடன் தங்கம்

பொதுமக்களின் நிதித் தேவைகளைக் கருத்தில்கொண்டு, ஒரு கிராம் தங்கத்திற்கான அதிகபட்ச நகைக்கடன் தொகையை ரூ. 10,000 ஆக உயர்த்துவதற்கு கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதல்கள் பெறப்பட்டவுடன் இந்த புதிய திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நகைக்கடன் பெறுவோருக்குக் கூடுதல் கடன் தொகை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.