நகைபறிப்பு, மோசடி... யூடியூபர் மதுமிதா இன்று நேரில் ஆஜராக சம்மன்!

 
மதுமிதா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த பிரபல யூடியூபர் மதுமிதாவின் வீட்டில் அண்மையில் 118 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவர் மீது அளிக்கப்பட்ட பழைய நகை பறிப்புப் புகார் தொடர்பாகக் காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

நாகர்கோவில் அருகே தம்புக்கோணம் அனந்தநாடார்புரத்தைச் சேர்ந்த யூடியூபர் மதுமிதா வீட்டில் நடந்த நகைக்கொள்ளை வழக்கில் தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 98 சவரன் நகைகள் காவல்துறையினரால் மீட்கப்பட்டன. 

மதுமிதா

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் கே.டி.சி. நகரைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் பேச்சிமுத்து (35) என்பவர் கடந்த 2022-ஆம் ஆண்டு ராஜக்கமங்கலம் காவல் நிலையத்தில் ஒரு புகாரை அளித்திருந்தார். அதில், முதுகுவலி சிகிச்சைக்காகப் பிசியோதெரபிக்குச் சென்றபோது மதுமிதாவுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், கடந்த 2022-ஆம் ஆண்டில் உத்தமபாண்டியன்குளம் விலக்கு பகுதியில் காரில் சென்றபோது மதுமிதா தன்னிடம் இருந்த ஐந்து சவரன் நகையைப் பறித்துச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சம்பவம் நடைபெற்ற திருநெல்வேலி மாவட்டம் உத்தமபாண்டியன்குளம் பகுதி பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்பதால், அந்த வழக்கு பின்னர் அங்கгі மாற்றப்பட்டது. 

மதுமிதா

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக யூடியூபர் மதுமிதாவிடம் நேரில் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ள காவல்துறையினர், இன்று பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று அவருக்குச் சம்மன் அனுப்பியுள்ளனர்.