ஜார்க்கண்ட்டில் இன்று அதிகாலை கோர விபத்து... 3 பெண்கள் உட்பட13 பேர் பலி!

 
jaarkhand

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் பகுதியில் இன்று அதிகாலை நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ராஞ்சி - பாட்னா நெடுஞ்சாலையில் குஜு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பைங்கி கிராமம் அருகே அதிகாலை சுமார் 2 மணியளவில் அதிவேகமாகச் சென்ற வாகனம், முன்னால் சென்ற கனரக வாகனத்தின் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

வாகனத்தில் பயணித்தவர்களில் பெண்கள் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து மரணம் கொலை  தற்கொலை

பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள் ராஜ்ரப்பா கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்துப் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.