64 வயதில் 3-வது திருமணம்! காதலி Min Ah-வை ரகசியமாக மணந்தார் ஹாலிவுட் நடிகர் Jim Carre

 
jim carry

 

ஹாலிவுட் நடிகர் Jim Carrey தனது நீண்டகால காதலியான Min Ah-வை தனிப்பட்ட முறையில் திருமணம் செய்துகொண்டதாக அவரது பிரதிநிதி உறுதிப்படுத்தியுள்ளார். 64 வயதில் Jim Carrey 3-வது முறையாக திருமணம் செய்துகொண்டிருப்பது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

பிரபல ஹாலிவுட் நடிகரும் நகைச்சுவை கலைஞருமான Jim Carrey, Min Ah-வை லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற சிறிய அளவிலான தனிப்பட்ட திருமண நிகழ்வில் திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jim Carrey மற்றும் Min Ah ஆகியோர் தங்களது உறவை நீண்ட காலமாக பொதுமக்களின் பார்வையில் இருந்து விலக்கி வைத்திருந்தனர். இருவரும் 2022-ம் ஆண்டிலேயே ஒன்றாக காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரான்சில் நடைபெற்ற César விருது விழாவில் இருவரும் முதல் முறையாக ஜோடியாக பொதுவெளியில் தோன்றினர்.

அந்த விழாவில் Jim Carrey-க்கு கௌரவ விருது வழங்கப்பட்டது. விருதை பெற்றுக்கொண்டபோது பிரெஞ்சு மொழியில் பேசிய அவர், தனது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்ததுடன் Min Ah-வையும் தனது “சிறப்பான துணை” எனக் குறிப்பிட்டு அன்பை வெளிப்படுத்தினார்.

Jim Carrey marries longtime girlfriend Min Ah in private Los Angeles ceremony

Jim Carrey ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்துள்ளார். 1987-ல் Melissa Womer-ஐ திருமணம் செய்த அவர், 1995-ல் அவரை விவாகரத்து செய்தார். இவர்களுக்கு Jane Erin Carrey என்ற மகள் உள்ளார். பின்னர் 1996-ல் தனது ‘Dumb and Dumber’ பட சக நடிகையான Lauren Holly-யை திருமணம் செய்தார். அந்த திருமணம் ஒரு வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது.இந்த நிலையில், நீண்டகாலமாக தனிப்பட்ட வாழ்க்கையை ஊடக வெளிச்சத்திலிருந்து விலக்கி வைத்திருந்த Jim Carrey, Min Ah-வை திருமணம் செய்திருப்பது ஹாலிவுட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.