5G வரல... ஜியோ ஊழியரை டவரில் கட்டிய மக்கள்! 🚨... பகீர் வீடியோ!
5G சேவைக்காக ரீசார்ஜ் செய்தும் எதிர்பார்த்த அளவுக்கு நெட்வொர்க் கிடைக்கவில்லை எனக் கூறி, ஜியோ நிறுவனத்தின் தொழில்நுட்ப ஊழியரை மொபைல் டவரில் கட்டி வைத்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் ஃபதேபூர் மாவட்டம் ஹர்தௌலி கிராமத்தில் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பகுதியில் நீண்ட காலமாக செல்போன் நெட்வொர்க் பிரச்சனை இருப்பதாகவும், பலமுறை புகார் அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை எனவும் கிராம மக்கள் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
நெட்வொர்க் பிரச்சனையை சரிசெய்ய அங்கு சென்ற ஜியோ தொழில்நுட்ப ஊழியர் ஆதித்ய பான் சிங் என்பவரை சிலர் சூழ்ந்து, மொபைல் டவரில் கட்டி வைத்ததாக கூறப்படுகிறது. அவர் சுமார் இரண்டு மணி நேரம் அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவத்தை ஒருவர் வீடியோவாக பதிவு செய்த நிலையில், அது சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது சட்டவிரோதமாக ஒருவரை அடைத்து வைத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
