உடனே அப்ளை பண்ணுங்க... 10ம் வகுப்பு படிச்சிருந்தாலே போதும்.... ரயில்வேயில் 32438 பணியிடங்கள்!

இந்திய ரயில்வே குரூப் D பிரிவில் 32,438 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் தொடங்கிய தேதி : 23 ஜனவரி 2025
விண்ணப்பிக்க கடைசி தேதி : 22 பிப்ரவரி 2025
விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள் : பிப்ரவரி 25 வரை
விண்ணப்பப் படிவத்தில் திருத்தங்களைச் செய்யும் நாட்கள்
பிப்ரவரி 25 முதல் மார்ச் 06 வரை
பணியிடங்கள் :
தடப் பராமரிப்பாளர், பாய்ண்ட்ஸ்மேன், உதவி டிஆர்டி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் லெவல் 1 பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.
தடப் பராமரிப்பாளர் : 13,187 காலிப்பணியிடங்கள்
பாய்ண்ட்ஸ்மேன் : 5058
பாய்ண்ட்ஸ்மேன்-B : 5058 பணியிடங்கள்
உதவியாளர் (Track Machine) : 799 பணியிடங்கள்
உதவியாளர் (Bridge) : 301 பணியிடங்கள்
தடப் பராமரிப்பாளர் Gr. IV : 13,187 பணியிடங்கள்
உதவியாளர் P-Way: 247 பணியிடங்கள்
உதவியாளர் (C&W) : 2587 பணியிடங்கள்
உதவி TRD : 1381 பணியிடங்கள்
உதவியாளர் (S&T) : 2012 பதவிகள்
உதவியாளர் லோகோ ஷெட் (Diesel) : 420 பணியிடங்கள்
உதவியாளர் லோகோ ஷெட் (Electrical) : 950 பணியிடங்கள்
உதவி செயல்பாடுகள் (Electrical) : 744 பணியிடங்கள்
உதவியாளர் TL & AC : 1041பணியிடங்கள்
உதவி TL & AC (Workshop) : 624 பணியிடங்கள்
உதவியாளர் (Workshop) (Mech) : 3077 பணியிடங்கள்
கல்வித்தகுதி
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10ம் வகுப்பு / ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள்
வயது வரம்பு : 18 முதல் 36 வரை
விண்ணப்பக் கட்டணம் :
பெண்கள், PwBD, திருநங்கைகள், முன்னாள் படைவீரர்கள், SC, ST, சிறுபான்மையினர் மற்றும் EBC விண்ணப்பதாரர்கள் ரூ.250 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.
வங்கி டெபிட்/கிரெடிட் கார்டுகள் அல்லது UPI சேவை மூலம் விண்ணப்ப கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் செலுத்தலாம்.
RRB குரூப் D தேர்வு முறை :
கணினி அடிப்படையிலான சோதனை தேர்வு (CBT)
உடல் திறன் சோதனை (PET)
ஆவண சரிபார்ப்பு (DV) மற்றும்
மருத்துவ பரிசோதனை (ME)
இவற்றில் முதல் நிலையான கணினி அடிப்படையிலான சோதனை தேர்வில் 100 கேள்விகள் கேட்கப்படும்.
பாடத்திட்டம் : கேள்விகள் மதிப்பெண்கள்
பொது அறிவியல் 25 25
கணிதம் 25 25
பொது நுண்ணறிவு 30 30
நடப்பு விவகாரங்கள் 20 20
எதிர்மறை மதிப்பெண்
கணினி அடிப்படையிலான சோதனை தேர்வில் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 1/3 மதிப்பெண் கழிக்கப்படும்.
மாத சம்பளம் : அடிப்படை ஊதியமாக மாதம் ரூ.18,000 வழங்கப்படும் மற்றும் DA, HRA, TA, போன்ற சலுகைகளும் உள்ளன.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான rrbcdg.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து பிப்ரவரி 22 தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!